தொடருந்து மோதி ஒரே குடும்பத்தின் மூவர் பலி - படங்கள் இணைப்பு !!
வட்டவளை - ரொசல்ல பகுதியில் தொடருந்து மோதி 3 பேர் பலியாகியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரொசல்ல தொடருந்து நிலையத்துக்கு அருகில் இன்று முற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் பலியானவர்கள் மஸ்கெலியா - சாமிமலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களின் சடலங்கள் நாவலப்பிட்டி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
.jpeg
)





கருத்துகள் இல்லை