ரின் மீன்கள் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல்!!
இலங்கைக்கு ரின் மீன்களை இறக்குமதி செய்யும் ஐந்து பிரதான நிறுவனங்களுக்கும் உள்நாட்டில் ரின் மீன்களை இறக்குமதி செய்யும் மூன்று முன்னணி நிறுவனங் களுக்கும் எதிராக வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
இலங்கை தயாரிப்புகள் அல்லது இறக்குமதி செய்யப் பட்ட ரின் மீன்கள் உள்ளூர் விதிமுறைகளுக்கு அமைய SLS 591 தரநிலைகளுக்கு இணங்க வேண்டும். அதன்படி, ரின் மீன்களில் அதிகபட்சமாக ஒரு கிலோ வுக்கு 1 மில்லிகிராம் ஆர்சனிக் இருக்கக் கூடும்.
எனினும், புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகாரசபை டிசம்பர் 14 ஆம் திகதி புத்தளம் நீதிவான் நீதிமன்றில் எட்டு வகையான ரின் மீன்களுக்கு எதிராக, கடந்த காலங்களில் அதிகபட்ச ஆர்சனிக் வரம்பை மீறியதற்காகவும் வழக்குத் தாக்கல் செய்துள்ளது.
இலங்கைக்கு ரின் மீன்களை இறக்குமதி செய்யும் ஐந்து பிரதான நிறுவனங்களுக்கும் உள்நாட்டில் ரின் மீன்களை இறக்குமதி செய்யும் மூன்று முன்னணி நிறுவனங் களுக்கும் எதிராகவே இந்த இந்த வழக்குகள் தாக்கல் செய்யப் பட்டுள்ளன.
மேலும் மாவட்டம் முழுவதும் ரின் மீன்களின் தரம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புத்தளம் மாவட்ட நுகர்வோர் அதிகார சபை தெரிவித் துள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை