குளவி கொட்டுக்கு இலக்கான ஆண் உயிரிழப்பு!!
திருகோணமலை - தென்னமரவாடி பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்கான ஆண் ஒருவர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 69 வயதானவர் என புல்மோட்டை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அவர் இன்று காலை தமது வீட்டில் இருந்து மாடு மேய்ச்சலுக்காக சென்றபோது குளவி கொட்டுக்கு இலக்கானார்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர் புல்மோட்டை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போது உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலத்தைப் பிரேத பரிசோதனைகளின் பின்னர், உறவினர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை