திருகோணமலையில் சமையல் எரிவாயு வெடித்தது!!
திருகோணமலை,நகரில் புதிய சோனக வீதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23)காலை உணவாக நூடூல்ஸ தாயாரிக்கும் போது எரிவாயு வெடித்து அதன் அடுப்பு சிதறி தீப்பற்றியது
இதனால் சமையலில் ஈடுபட்டிருந்த குறித்த வீட்டின் பெண்மணி வாயு அடுப்பின் இணைப்பை உடனடியாக அகற்றி எரியும்வாயு அடுப்பின் மீது தண்ணீர் விசிறி எரிந்து தீயை அணைத்துள்ளார்
அதைனையடுத்து திருகோணமலை தலைமைப்பொலிஸாருக்கு விடயம் தெரியப்படுத்தப்பட்டதை அடுத்து குறித்த வீட்டிற்கு விறைந்த தலைமையகப்பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஏ.ஜே.எம்.சாலி
திருகோணமலை
கருத்துகள் இல்லை