கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!--பொன்மொழிகள்

 


 மரத்தில் ஏற முடியாத மனிதன்தான் ஒருபோதும் மரத்திலிருந்து விழுந்ததில்லை என்று பெருமை பேசி கொண்டிருப்பான்.


- லுட்விக் கிளாஜஸ்

 கும்பல்களுக்கு இருக்கும் அளவுக்கு ஒரு தனி நபர்க்கு முட்டாள்தனம் இருக்க முடியாது. அதனால்தான் வன்முறையின்போது கும்பல் கொலைகள் இருக்கின்றதே தவிர தனிநபர் கொலைகள் இருப்பதில்லை.

- பென் ஹோரோவிட்ஸ்

 வெகுமக்ககளின் சிந்தனையற்ற ஒப்புதலை விட, ஒற்றை அறிவார்ந்த மனிதரின் கடுமையான விமர்சனத்தை நான் மிகவும் விரும்புகிறேன்.

- ஜோகன்னஸ் கெப்லர்

 கடவுள் என்ற சொல் எனக்கு ஒன்றுமே இல்லை. அது வெறும் மனித பலவீனத்தின் வெளிப்பாடு. எந்த ஒரு நுட்பமான விளக்கமும் இதில் என்னுடைய நிலைப்பாட்டை மாற்ற முடியாது.

- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்

 விஞ்ஞானத்தில் நம்பிக்கை கொள்ளாத மக்களுக்கு அதிகாரத்தை வழங்குவதை நிறுத்துங்கள்.

- ஹாரிசன் ஃபோர்டு

 சில சமயங்களில், கண்களுக்கு தெரியாதது இதயத்துக்கு தெரிகிறது.

- ஹெச் ஜாக்சன் பிரவுன் ஜூனியர்

 நாம் எப்போதும் நம்பிக்கையை தளரவிடாமல், மேலும் நல்லதை செய்ய முயற்சிக்க வேண்டும்.

- கோபி அன்னான்

 நீங்கள் பெருங்கடலில் சிறுதுளி அல்ல, சிறுத்துளியில் முழு கடல்.

- ஜலால் அத்-டின் முஹம்மத் ருமி



 வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது, அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்.

- ஜார்ஜ் சாண்ட்

 என் அம்மா எப்போதும் என்னிடம் சொல்வது: வாழ்வதற்கான காரணம் எதையும் உன்னால் கண்டுபிடிக்க முடியாவிட்டால், சாவதற்காக ஒரு காரணத்தை கண்டுபிடிப்பது மேல்.

- டுபக் ஷகூ

 முன்னோக்கி செல்ல பல வழிகள் உள்ளன, ஆனால் இங்கேயே நிற்பதற்கு ஒரே ஒரு வழி மட்டுமே உள்ளது.

- ப்ராங்ளின் ரூஸ்வெல்ட்

 படைப்பாற்றல் என்பது தவறுகள் செய்ய உங்களை அனுமதித்துக்கொள்வது. படைப்பு என்பது எந்த தவறை வைத்துக்கொள்வது என்பதை தெரிந்துகொள்வது.

- ஸ்காட் ஆடம்ஸ்

 ஒட்டுமொத்த மனித குலத்தின் கூட்டு பங்களிப்பால் உருவாக்கப்பட்டது இயற்பியல். அதில் கிழக்கு மேற்கு, தெற்கு வடக்கு அனைத்திற்கும் சமமான பங்கு உண்டு.

- அப்துஸ் சலாம்

 90% கருப்பு நிறத்தவர்களை கொண்ட நாட்டில், கருப்பு நிறத்தை கொண்டவர்கள் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது வேதனை. கருப்பாய் இருங்கள், அழகாய் இருங்கள்!

- நந்திதா தாஸ்

 கண்ணாடியில் புன்னகை செய்யுங்கள். ஒவ்வொரு காலையும் இதை செய்யும்போது, நீங்கள் உங்கள் வாழ்வில் ஒரு பெரிய வித்தியாசத்தை உணரத் தொடங்குவீர்கள்.

- யோகோ ஓனோ

 செயல்கள் விதியின் விதைகள், அவைதான் இலக்குகள் என்ற விருட்சங்களாக வளர்கின்றன.

- ஹாரி எஸ் ட்ரூமன்

 பழக்கங்களை எளிதாக பெற முடியாது. அனுபவத்தின் மூலம் பெறப்படும் சோதனை மற்றும் துன்பங்களின் வழியாகவே ஆன்மாவை வலுவூட்டவும், லட்சியத்தை தூண்டவும், அதன்மூலமே வெற்றியை அடையவும் முடியும்.

- ஹெலன் ஹெல்லர்



 அடிக்கடி சொல்லப்படும் ஒரு பொய் உண்மையாகிவிடும்.

- லெனின்

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.