கிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம்!!




கிண்ணியாவில் அண்மையில் மிதப்பு பாலம் கவிழ்ந்து விபத்துக்குள்ளான போது கிண்ணியா வைத்தியசாலையின் முன் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.


இதனை அறிக்கையிட சென்ற இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டதை கண்டித்தே இந்தக் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஊடக சுந்திரத்தினையும், பாதுகாப்பினையும் உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் கோஷமிட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன்போது, முல்லைத்தீவில் அண்மையில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமைக்கும் எதிர்ப்பு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.