மின் கட்டணம் தொடர்பில் வெளிவந்த அறிவிப்பு!!

 


தற்போதைய சூழ்நிலையில் மின் கட்டணத்தை அதிகரிக்கும் திட்டம் இல்லை."


- இவ்வாறு மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.


நாட்டில் பொருட்களின் விலைகள் நாளாந்தம் அதிகரிக்கின்றன. இந்நிலையில் மின்சார கட்டணமும் உயருமா என எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.


அவர் மேலும் தெரிவித்ததாவது:-


"நாட்டில் பொருட்களுக்குச் சிறிதளவு தட்டுப்பாடுகள் உள்ளன. ஆனாலும், வரிசை யுகம் உருவாகவில்லை.


அதேபோல் மின்கட்டணத்தில் எவ்வித மாற்றமும் வராது. பழைய கட்டணமே அறிவிடப்படும்" - என்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.