வவுனியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு!!
இன்று(23) காலை வவுனியா மாவட்ட செயலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தொழிற்சந்தை நிகழ்வு இடம்பெற்றது.
மனிதவலு வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் மாவட்டச்செயலக தொழில் நிலையத்தின் ஏற்பாட்டில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நிகழ்வில் மாற்றுத்திறனாளி இளைஞர், யுவதிகள் பலர் கலந்துகொண்டு பல்வேறு தொழில்வாய்ப்புக்களை பெற்றுக்கொண்டனர்.
மாவட்ட செயலாளர் சரத்சந்திர தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், தனியார்தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், உதவிமாவட்ட செயலாளர் சபர்ஜா, தொழில் திணைக்களத்தின் உத்தியோகத்தர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை