கடவுச்சீட்டு பெற காத்திருப்போருக்கான புதிய தகவல்!!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் பத்தரமுல்ல தலைமை அலுவலகத்தின் ஒரு நாள் சேவையில் தினமும் 1200 கடவுச்சீட்டுகள் வழங்கப்படுகின்றதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.
இத்தகவலை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அதன்படி ஒரு நாள் சேவைக்கான வரும் தினசரி விண்ணப்பங்களின் எண்ணிக்கை சுமார் 1,000 என்றும் அந்த அதிகாரி கூறினார்.
இதன் எண்ணிக்கை சிறிதளவு அதிகரித்த போதிலும், கடந்த அக்டோபரில் நிலவிய நிலை தற்போது தணிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் திகதி மற்றும் நேரத்தை முன்பதிவு செய்யாமல் பொதுமக்கள் சேவைகளைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை