யாழில் மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!


 தமிழக மீனவர்களின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, யாழ்ப்பாண மாவட்ட செயலகத்துக்கு முன்னால் ஏ9 வீதியை மறித்து மீனவர்கள் இன்று(24) காலை ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.


இதனால் அவ்வீதியூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியார் தெரிவித்தார்.

இந்திய இழுவைப்படகு மீனவர்களின் அத்துமீறலைக் கண்டித்து யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனம் உட்பட பல்வேறு மீனவ அமைப்புக்களின் ஏற்பாட்டில் இன்றைய தினம் யாழ் மாவட்ட செயலகம் முற்றுகையிடப்பட்டு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

யாழ் மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்க சமாசங்களின் சம்மேளன முன்றலில் இருந்து கடற்றொழிலாளர்களால் ஆரம்பிக்கப்பட்ட பேரணி யாழ் மாவட்ட செயலக முன்றலில் நிறைவடைந்தது.

'அத்துமீறி மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்களை கைது செய், நல்லெண்ண அடிப்படையில் விடுதலை செய்யக் கூடாது, கைது செய்த படகுகளைப் விடுவிக்கக் கூடாது' போன்ற பல்வேறு கோஷங்களை எழுப்பி மீனவர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர். 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.