தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!!

 


அத்தியவசிய பொருட்கள் மற்றும் எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்தும், மக்களுக்கு நிவாரணம் வழங்குமாறு வலியுறுத்தியும், கினிகத்தேனையில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து தீப்பந்தம் ஏந்தி அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.


நேற்று இரவு (23) கினிகத்தேனை காவல் நிலையத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.


ஆர்ப்பாட்டத்தின்போது ‘அமைச்சர்கள் சொகுசு வாகனங்களில், அப்பாவி மக்கள் எண்ணைச் சட்டிக்குள், போதும் போதும் அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புவோம், விலை ஏற்றி ஏழைகளின் வயிற்றில் அடிக்காதே’ போன்ற பல கோஷங்களை எழுப்பியவாறு ஆதரவாளர்கள் தமது எதிர்ப்பை வெளிக்காட்டினார்கள்.


இதன்போது அரசாங்கம் எரிபொருள் விலையை உடன் குறைக்க வேண்டும் என்பதனையும் ஆர்ப்பாட்டகாரர்கள் வலியுறுத்தினர். 


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.