பாகிஸ்தான் வைத்தியர் பதிந்துள்ள மனதை உருக்கும் பதிவு!!

 


இலங்கை 35 ஆயிரம் கண்களை எங்களிற்கு தானம் செய்தது ஆனால் நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என பாகிஸ்தானின் தலைசிறந்த கண் மருத்துவர் நியாஜ் புரோகி கவலை வெளியிட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை இலங்கை பிரஜை கும்பல் ஒன்றினால் படுகொலை செய்யப்பட்ட தருணம் முதல் நான் நாட்டின் ஏனைய பலரை போல துயரத்தில் சிக்குண்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ள அவர் அவமானம் தாங்காமல் வெட்கி தலைகுனிகின்றோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள இலங்கை கண் தான அமைப்பின் முக்கிய உறுப்பினரான அவர் அந்த அமைப்பிற்கு எழுதியுள்ள கடிதத்தில் இதனை தெரிவித்துள்ளார்.

சாமா டிஜிட்டலிற்கு கருத்து தெரிவித்துள்ள அவர் இலங்கை 83200 விழிவெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இவற்றில் பெருமளவானவற்றை பாக்கிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது 40 வீதத்தினை பெற்றுக்கொண்டுள்ளது என தெரிவித்துள்ள அவர் 1967 முதல் கண் தான சங்கம் பாகிஸ்தானிற்கு 35 ஆயிரம் விழிவெண்படலங்களை தானம் செய்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை எங்களிற்கு கண்களை தானம் செய்தது நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.