தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம்!
எரிபொருள் விலை ஏற்றம் உள்ளிட்ட இதர பிரச்சினைகளுக்கு அரசாங்கம் உடனடி தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ஐக்கிய மக்கள் சக்தியின் கொத்மலை பிரதேச அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் கொத்மலை தவலந்தென்ன நகரத்தில் தீப்பந்தம் ஏந்தி ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டம் நேற்று(26) இரவு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தவலந்தென்ன பகுதியில் ஆரம்பமான இப்போராட்டத்தில் கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில், கொத்மலை மற்றும் இறம்பொடை உள்ளிட்ட பல பிரதேசங்களை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து அரசாங்கத்துக்கு எதிராக கோஷம் எழுப்பியிருந்தனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை