15 வயது சிறுமி சடலமாக மீட்பு!!
புத்தளத்தில் சிறுமி ஒருவரின் சடலம் கிணற்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருவலகஸ்வௌ, சியம்பலேவ கிராமத்தில் 15 வயதுடைய சிறுமியின் சடலமே அவரின் வீட்டிலுள்ள கிணற்றில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
கருவலகஸ்வௌ, டீ.எஸ்.சேனாநாயக்க வித்தியாலத்தில் தரம் 10இல் கல்வி கற்கும் மாணவியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுமியின் தாய் கூலி வேலை செய்து சம்பாதித்த பணத்தில் சிறுமியின் கல்வி நடவடிக்காக கையடக்கத் தொலைபேசி ஒன்றை வாங்கிக் கொடுத்துள்ளார்.
இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கமைய இந்தச் சிறுமி கருவலகஸ்வௌ பிரதேசத்தைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனுடன் காதல் தொடர்பு வைத்துள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞருடன் கடந்த இரு நாட்களாக தொலைபேசியில் தகவல்கள் பரிமாற்றிக் கொண்டுள்ளார். அதன் பின்னர் ஏதோ ஒரு விடயம் தொடர்பில் மன ரீதியான பாதிப்புக்குள்ளாகியிருந்தார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது எனப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எனினும், இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை