சம்பூர் இளைஞன் விடுதலை!!

 


பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பூர் இளைஞன்  திருகோணமலை மேல் நீதி மன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டார்.


மூதூர் – சம்பூர் 2ம் வட்டாரத்தைச் சேர்ந்த பாலகிருஸ்ணன் ரதிகரன் என்ற இளைஞன் கடந்த ஆண்டு மாவீரர் தினத்தையொட்டி கவிதை ஒன்றினை தனது முகப்புத்தகத்தில் பதிவேற்றியமைக்காக 27.11.2020 அன்று பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் ஒரு வருடத்திற்கு பின்னர் இன்று (14.12.2021) ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான இரு சரீர பிணையில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.  இவர் மீது PTA மற்றும் ICCPR  சட்டத்தின் கீழ்  குற்றங்கள் சுமத்தப்பட்டிருந்தது  என்பது குறிப்பிடத்தக்கது. பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டவர்களுக்காகப் போராடும் தன்னார்வ நிறுவனத்தின் சட்டத்தரணிகள் இந்த வழக்கை முன்னெடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.