அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் இன்று தொழிற்சங்க நடவடிக்கை!!

 


இன்று  5 மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.


அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதித்துவம் இல்லாமல் சுகாதார அமைச்சினால் 500 வைத்தியர்களுக்கான நியமனப் பட்டியல் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அந்த சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக்குழு உறுப்பினர் வைத்தியர் வாசன் ரட்ணசிங்கம் குறிப்பிட்டார்.


இதற்கமைய, நுவரெலியா, மன்னார், திருகோணமலை, இரத்தினபுரி மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைகளில் இன்று காலை முதல் தொழிற்சங்க நடவடிக்கையினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.