தென் கொரிய முன்னாள் அதிபர் சிறையிலிருந்து விடுதலை!


தென் கொரிய முன்னாள் அதிபர் பார்க் குவென்-ஹுய் (Park Geun-hye) சுமார் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சோலில் சிகிச்சை பெற்று வந்த மருத்துவமனை அறையிலிருந்து திருவாட்டி பார்க் விடுவிக்கப்பட்டார்.

தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் (Moon Jae-in), புத்தாண்டை முன்னிட்டு,சிறப்பு மன்னிப்பு அளித்ததால், திருவாட்டி பார்க்கின் விடுதலை சாத்தியமானது.

உடல்நலம் குன்றி வருவதாலும், நாட்டில் ஒற்றுமையை ஊக்குவிக்கும் முயற்சிகளின் ஓர் அங்கமாகவும் திருவாட்டி பார்க் விடுவிக்கப்பட்டார்.

கடுமையாக நோய்வாய்ப்பட்டிருந்த திருவாட்டி பார்க் சில வாரங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அவர் நலம் பெற வேண்டி ஆதரவாளர்கள் மருத்துவமனைக்கு வெளியே மலர்க்கொத்துகளை விட்டுச் சென்றனர்.

அதேசமயம், திருவாட்டி பார்க்கின் விடுதலையை எதிர்ப்போர் அதிபர் அலுவலகம் அருகே போராட்டம் நடத்தினர்.

அதிபரின் பொது மன்னிப்பு முடிவை அரசாங்கம் திரும்பப் பெற வேண்டும் என்று அவர்கள் கோரினர்.

முதன்முறை, ஜனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட திருவாட்டி பார்க் தென் கொரியாவில் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.

அவரைப் பதவியிலிருந்து நீக்க நாடாளுமன்றம் வாக்களித்ததை 2017 இல் அரசமைப்பு நீதிமன்றம் உறுதி செய்தது.

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய குற்றத்துக்காகத் திருவாட்டி பார்க்கிற்கு 22 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.