தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் - அமைச்சர்


நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டு ஏற்ப வாய்பு- இ.மி.பொறியியலாளர் சங்கம் ; தடையின்றி மின்சாரம் வழங்க முடியும் - அமைச்சர்

எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் குறைவதால் நாட்டில் பாரிய மின்வெட்டு ஏற்பட வாய்ப்புள்ளதாக இலங்கை மின்சார சபை பொறியியலாளர்கள் சங்கம் (CEBEU) எச்சரித்துள்ளது.
நாளாந்தம் நான்கு மணித்தியாலங்கள் மின்வெட்டுக்கு தயாராக இருக்குமாறு மக்களை கேட்டுக்கொள்வதாக CEBEU இன் தலைவர் சௌமிய குமாரவாடு தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபையிடம் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு 3000 மெற்றிக் தொன் டீசல் மட்டுமே இருப்பதாகவும், ஓயில் 22 நாட்களுக்கு மட்டுமே போதுமானது என்றும் அவர் கூறுகிறார்.
அதன்படி, மூன்று நாட்களுக்குப் பிறகு மின்சாரத்தை துண்டித்து, தேவையை குறைக்க வேண்டும், தவறினால் மின் கட்டத்தின் சமநிலையை பராமரிக்க முடியாது, என்றார்.
 
தடையின்றி மின்சாரம் வழங்க முடியும்- அமைச்சர்.
நாடு முழுவதும் நாளை மறுதினம் (18) வரை மின்சாரத்தை தடையின்றி வழங்க முடியும் என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவிக்கின்றார்.
களனிதிஸ்ஸ மின்உற்பத்தி நிலையத்திற்கு 3000 மெற்றிக் தொன் டீசல் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் 3000 மெற்றிக் தொன் டீசலின் ஊடாக, எதிர்வரும் 18ம் திகதி வரை நாடு முழுவதும் தடையின்றி மின்சாரத்தை வழங்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிடுகின்றார்.
எதிர்வரும் 22ம் திகதி வரை தமக்கு தேவையான எரிபொருளை விநியோகிக்குமாறு கோரிக்கை விடுக்கும் நோக்குடன், வலுசக்தி அமைச்சுடன் நாளைய தினம் (17) கலந்துரையாடல்களை நடத்த, தாம் எதிர்பார்த்துள்ளதாக மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.