அக்கரபத்தனை ஆலயத்தில் விக்கிரகங்கள், சிலைகள் உடைப்பு
அக்கரப்பத்தனை நகரத்தில் உள்ள ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் விக்கிரங்கள் மற்றும் சிலைகள் உடைத்து சேதமாக்கப்பட்டுள்ளன. இதனால் அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவம் 02.01.2022 அன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் என நகரவாசிகள் தெரிவிக்கின்றனர்.
அக்கரப்பத்தனை நகரத்தில் இதுவரை காலமாக ஆலயம் ஒன்று இல்லாத நிலையில் புதிதாக புனரமைக்கப்பட்ட குறித்த ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலேயே இவ்வாறு சிலைகள் மற்றும் விக்கிரங்கள் உடைக்கப்பட்டுள்ளன.
குறித்த ஆலயத்தில் இம்மாதம் 19 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கும்பாபிஷேகமும் இடம்பெறவுள்ளது. இந்த நிலையிலேயே இவ்வாறான ஒரு சம்பவம் இடம்பெற்றது அந்த பகுதியில் பெரும் பதற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.
அக்கரப்பத்தனை நகர வர்த்தகர்களும் அனைத்து கடைகளையும் மூடி ஆலயத்திற்கு முன்பாக ஒன்றுகூடி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருகின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை