மீட்கப்பட்ட சிறுவர்கள் தொடர்பில் வெளியான பகீர் தகவல்கள்!
வீடொன்றில் இருந்து காணாமல் போய், 43 நாட்களின் பின்னர் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்ட 10 மற்றும் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தொடர்பிலான பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொட்டதெனியாவ பகுதியில் உள்ள வீட்டிலிருந்து சிறுவர்கள் இருவரும் காணாமல்போன நிலையில், நேற்று முன்தினம் பெண்ணொருவரால் சிறுவர்கள் ஒப்படைக்கப்பட்டிருந்தாக பொலிஸார் கூறியிருந்தனர். இந்த நிலையில் சிறார்களை ஒப்படைத்த பெண்ணின் வீட்டிலேயே அவர்கள் ஒரு மாதமளவில் தங்கியிருந்தமை விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
வீட்டில் தாயார் கடுமையாக அடிப்பதாலேயே, தாம் தப்பிச் சென்றதாக இரண்டு சிறார்களும் தெரிவித்துள்ளனர். குறித்த வீட்டில் சுமார் 9 சிறார்கள் இருப்பதாகவும், குழந்தைகளை பராமரிக்கும் பணியை சரியாக செய்வதில்லைனெ 14, 10 வயதான சிறார்கள் தாக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இருசிறார்களும் ஏற்கனவே ஒரு முறை வீட்டை விட்டு தப்பிச்செல்ல முற்பட்டுள்ளனர். ஏற்கனவே அவர்கள் தப்பிச் சென்றபோது, கொட்டதெனியாவ பொலிசார் அவர்களை மீட்டு வீட்டில் ஒப்படைத்த நிலையில், அப்போதிருந்து, தாம் கடுமையாக வீட்டில் தாக்கப்பட்டதாக இரண்டு சிறார்களும் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தாயார் வீட்டில் இல்லாத சமயத்தில் 100 ருபாயுடன் புறப்பட்டவர்கள், பேருந்தில் நீர்கொழும்பு சென்றதாக கூறப்படுகிறது. நீர்கொழும்பில் வர்த்தக நிலையங்களில் உணவு வாங்கி சாப்பிட்டு, நாட்களை தாம் கடத்தியதாக சிறார்கள் முன்னர் தெரிவித்ததாக தகவல் வெளியாகியிருந்தது.
இவ்வாறான நிலையில் , சிறார்களை நேற்று முன்தினம் பொலிசாரிடம் ஒப்படைத்த பெண்ணின் வீட்டிலேயே ஒரு மாதத்திற்கு மேலாக சிறார்கள் இருந்தமை தற்போது தெரிய வந்துள்ளது. இரண்டு சிறார்களும் உணவு தேடி வந்ததாகவும், அவர்களிற்கு உணவளித்து விட்டு பொலிசாருக்கு அறிவித்ததாகவும் அப் பெண் தெரிவித்திருந்தார்.
எனினும், அந்த வீட்டில் சிறார்கள் ஒரு மாதமாக குறித்த பெண்ணின் வீட்டில் தங்கியிருந்தமை தற்போது தெரிய வந்துள்ளது. சிறார்கள் இருவரும் தங்கியிருந்த வீடு வாடகை வீடு. சிறார்கள் தங்கள் உறவினர்கள் என்றும், அவர்களின் பெற்றோருக்கு கோவிட் தொற்றியுள்ளதால், சிறார்களை தமது வீட்டில் தங்க வைத்துள்ளதாகவும் அந்த பெண், அயலவர்களிடம் கூறியுள்ளதாகம் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அத்துடன் சில நாட்களின் முன்னர் சிறார்களிற்கு 700 ரூபா கொடுத்து வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார். அதன்பின்னர் மீண்டும் அந்த வீட்டிற்கே சிறார்கள் திரும்பிச் சென்ற போதே, வீட்டு உரிமையாளரான பெண், பொலிசாருக்கு அறிவித்துள்ளார்.
இதேவேளை, இரண்டு சிறார்களும் மீண்டும் தமது பெற்றோரிடம் செல்ல விரும்பவில்லை என்றும் ஒரு மாதம் தங்கியிருந்த வீட்டுக்கு செல்லவே விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் மேலும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை