ஊடக அமைய அலுவலகம் வவுனியாவில் திறப்பு!!

 


வவுனியா ஊடக அமையத்தின் அலுவலகம் நேற்று (06) மாலை வவுனியா வைரவப்புளியங்குளத்தில் ஊடக அமையத்தின் தலைவர் எம்.ஜி.ரெட்னகாந்தன் தலைமையில் இடம்பெற்றது.


இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர்  பி.ஏ. சரத் சந்திரவும் சிறப்பு விருந்தினர்களாக வவுனியா பிரதேச செயலாளர் நா.கமலதாசன், வவுனியா நகரசபை செயலாளர் ஆர்.தயாபரன் , ஆகியோரும் கெளரவ விருந்தினர்களாக தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் எஸ்.சந்திரகுமார், வவுனியா முச்சக்கரவண்டி உரிமையாளர் சங்கத்தலைவர் சி .ரவீந்திரன் , வவுனியா பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தலைவர் கே . இராஜேஸ்வரன் , வர்த்தகர் சங்கச் செயலாளர் ஆ.அம்பிகைபாகன் , காஞ்சனா நகையக உரிமையாளர் க.செல்வராசா , மாவட்ட செயலக தகவல் உத்தியோகத்தர் உபுல் பாலசூரியவும் கலந்து கொண்டனர்.


வவுனியா ஊடக அமையத்திற்கான நிதி உதவி மற்றும் அலுவலக தளபாடங்கள் உட்பட பல்வேறு உதவிகளை அப்ரியல் அமைப்பின் பணிப்பாளர்  ரவீந்திர டீ சில்வா  வழங்கி வைத்தார்.Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.