சீனாவிலிருந்து அரிசி இறக்குமதி


சீனாவில் இருந்து 1 மில்லியன் மெற்றிக் தொன் அரிசி இறக்கமதி செய்யப்படவுள்ளமை குறித்து இதுவரையில் இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்று, ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான டலஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.


அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு, அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் இன்று (25) இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


இறக்குமதி செய்யப்படும் அரிசி சேதன பசளையில் உற்பத்தி செய்யப்பட்டதா என்பதற்கு உத்தரவாதமளிக்க முடியாது.


பல்வேறு பொது காரணிகளை அடிப்படையாகக் கொண்டு அரிசி இறக்குமதிக்கு தீர்மானம் எடுக்கப்பட்டது. சீனாவில் இருந்து 1 மில்லியன் மெற்றிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளதாக ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்ட விடயம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை இறுதி தீர்மானம் எடுக்கப்படவில்லை என்றார்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.