நீரில் மூழ்கி இரட்டைக் குழந்தைகள் பரிதாப பலி!!

 


சேலம் மாவட்டத்திலுள்ள பெத்தநாயக்கன் பகுதியில் தமிழரசன்-ஈஸ்வரி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணமாகி துளசிராமன், துளசிதரன் என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்துள்ளனர்.

இந்நிலையில் விவசாய தோட்டத்திற்கு தமிழரசனும், ஈஸ்வரியும் சென்றதால் தங்களது குழந்தைகளையும் அங்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது தோட்டத்தில் மீன் வளர்ப்பிற்கு இருந்த குட்டையில் 2 குழந்தைகளும் விளையாடிக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இருவரும் எதிர்பாராதவிதமாக குட்டை தண்ணீரில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் 2 குழந்தைகளின் உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

பின்னர் தகவலறிந்த கருமந்துறை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குழந்தைகளின் உடல்களை மீட்டு உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.