மின்சக்தி அமைச்சரின் மகிழ்வான செய்தி!!

 


குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவச சூரியக்கலங்களை வழங்க மின்சக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளது. இது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும், அடுத்த வாரம் முதல் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படும் என மின்சக்தி அமைச்சரான காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.

இதற்கமைய , 5W, 10W மற்றும் 15W மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய சூரியக்கலங்கள் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு வழங்கப்படவுள்ளதுடன், அவை இலவசமாக நிறுவப்படவுள்ளன. மேலும், சுமார் 5W சூரியக்கலங்களைப் பெறுபவர்களுக்கு 1500 ரூபா வழங்கப்படும்.

அவர்கள் சுமார் சுமார் 10 வருடங்களின் பின்னர் 10,000 ரூபாவை பெற்றுக் கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். இந்த சூரியக்கலங்கள் மத வழிபாட்டுத் தலங்களிலும் நிறுவப்படவுள்ளன.

ஒரு கிராம சேவையாளர் பிரிவுக்கு ஒரு வீட்டில் சூரிய மின் உற்பத்தி கலங்களை நிறுவுவதன் மூலம் இந்த வேலைத்திட்டம் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும், அதாவது திட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் 14,000 வீடுகளுக்கு சூரியக்கலங்கள் இலவச வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.