முகநூல் நட்பால் சிறுமியைக் கடத்திய பெண்!

 


முகநூல் ஊடாக 15 வயதான மாணவியுடன் பழகத்தை ஏற்படுத்தி, பெண் ஒருவர் அச்சிறுமியை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவம் இந்தியாவின் கேரளாவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் குறித்து தெரியவருகையில், கேரளா மாநிலம் ஆலப்புழா மாவட்டம் மாவேலிக்கரா பகுதியைச் சேர்ந்த பிளஸ் 1 படித்து வரும் 15 வயது மாணவியுடன் சமூக வலைதளத்தில் ஆண் ஒருவர் பழகி உள்ளார். சிறுமியிடம் பழகி அவரை திருமணம் செய்து கொள்வதாக ஏமாற்றி உள்ளதுடன், ஒரு வாரத்திற்கு முன்பு அவரது வீட்டிற்குச் சென்று சிறுமியை கடத்தி சென்று உள்ளார்.

இது குறித்து சிறுமியின் பெற்றோர்கள் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து சிறுமியை கடத்தி சென்றவரை வலைவீசி பொலிஸார் தேடிவந்தனர். இந்த நிலையில் அவர்கள் கைத்தொலைபேசி மூலம் சைபர்செல் உதவியுடன் தேடிய போது , சிறுமி திருச்சூரில் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதை தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸார் திருச்சூர் நகரிலிருந்து சந்தியா என்பவரை கைது செய்து அவரிடம் நடத்திய விசாரணையில் அவர் ஆண் வேடம் அணிந்த பெண் என்பதும் இவர் கடந்த 2016 இல் 14 வயதான சிறுமியை இதுபோல தொல்லை கொடுத்து கடத்திச் சென்றதும் விசாரணையில் வெளியானது.

எனினும் இவர் எதற்காக சிறுமியை கடத்திச் சென்றார் என்பது தெரியவில்லை. சிறுமியை மீட்ட பொலிஸார் அவரை மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைத்ததுடன், சிறுமியை கடத்திச் சென்ற பெண் மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சந்தியா( 27), திருவனந்தபுரம் மாவட்டம் வீரன்னபுரம் பகுதியைச் சேர்ந்தவர் . இவர் திருமணமாகி ஒரு குழந்தைக்கு தாய் எனவும் கூறப்படுகின்றது . மேலும் குறித்த பெண் இவர் மனநிலை சரியிலாதவர் என கூறப்படும் நிலையில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.  


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.