பிரபல நடிகை சாக்குமூட்டையில் சடலமாக மீட்பு!!
காணாமல் போன பிரபல நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), சாக்குமூட்டையில் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் திரயுலகினரை அதிர்ச்சி அடையவைத்துள்ள நிலையில், இந்தச் சம்பவத்தில் பிரபல நடிகர் ஒருவருவருக்கு தொடர்பிருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
வங்காள மொழியில் 1998ஆம் ஆண்டு முதல் படங்களில் நடிக்க தொடங்கிய நடிகை ரைமா இஸ்லாம் ஷிமு (Raima Islam Shimu), 25க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். 45வயதான அவர் தற்போது சின்னத்திரை தொடர்களில் நடித்து வருவதுடன் விளம்பரங்கள், தயாரிப்பு என திரையுலகில் பிஸியாக இருந்தார்.
இந்த நிலையில் ரைமா (Raima Islam Shimu)திடீரென காணாவில்லை என அவரின் கணவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து நடிகையை தீவிரமாக தேடிய நிலையில் கடைசியாக ரைமா யாரிடம் பேசினார்? எங்கே சென்றார் போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு விசாரணை முடுக்கிவிடப்பட்டிருந்தது.
அதேசமயம் நடிகை ரைமா இஸ்லாம் ஷிமுவை யாரேனும் கடத்தியுள்ளனரா அல்லது கொலை செய்யப்பட்டுள்ளாரா என்ற கோணத்திலும் காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில் ஹஸ்ரத்பூர் பாலம் அருகே சாக்குமூட்டையில் சடலம் ஒன்று இருப்பதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்ததையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு அனுப்பினர்.
ஆய்வில் அது காணாமல் போன நடிகை ரைமாதான் என உறுதிசெய்யப்பட்டுள்ளது. ரைமாவின் உடலில் தாக்குதலுக்கு உள்ளான காயங்கள் இருந்ததால் இது கொலை என உறுதிசெய்து அது குறித்து விசாரணையை தொடங்கியுள்ளன.
இது தொடர்பாக ரைமாவின் கார் ஓட்டுநர் மற்றும் கணவரை கைது செய்து விசாரணை நடத்தி வரும் பொலிஸார், ரைமாவின் கொலை தொடர்பாக திரையுலகைச் சேர்ந்த முக்கியமான நடிகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் நடிகை கொலை தொடர்பான விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை