சீன வெளிவிவகார அமைச்சரிடம் கோட்டாபய தெரிவித்த தகவல்!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீன வெளிவிவகார அமைச்சர் வாங் ஜி, (Wang Ji) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை (Gotabaya Rajapaksa) சந்தித்து பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.
இச் சந்திப்பானது இன்று (09-01-2022) ஞாயிற்றுக்கிழமை ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த சந்திப்பின் போது சீன வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தை கௌரவித்த ஜனாதிபதி இருநாடுகளிற்கும் இடையிலான வரலாற்று ரீதியில் நெருக்கமான உறவுகளை நினைவுகூர்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்றின்போது சீன அரசாங்கத்திடமிருந்தும் பொதுமக்களிடமிருந்தும் கிடைத்த ஆதரவிற்காக ஜனாதிபதி தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
இதேவேளை, இலங்கைக்கு மீண்டும் திரும்பிவந்துள்ளமை குறித்து மகிழ்ச்சி வெளியிட்டுள்ள, சீன வெளிவிவகார அமைச்சர் நெருக்கமான நண்பன் என்ற அடிப்படையில் சீனா எப்போதும் இலங்கைக்கு ஆதரவளிக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும், கொரோனா தடுப்பூசி திட்டத்தினை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்காக சீன அரசாங்கம் தொடர்ச்சியாக சினோபார்ம் தடுப்பூசியினை வழங்கியமைக்காக ஜனாதிபதி நன்றியை தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் உருவாகியுள்ள பொருளாதார நெருக்கடிக்கான தீர்வின் ஒரு பகுதியாக கடனை திருப்பி செலுத்துவதற்கான திறன் குறித்து கவனம் செலுத்தினால் அது நாட்டிற்கு பெரும் நிம்மதியாக அமையும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ (Gotabaya Rajapaksa) இந்த சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களிற்கு மலிவுவிலையில் சந்தைகடனை வழங்கும் முறையை பெற முடிந்தால் தடைகள் இன்றி தொழில்துறையை நடத்துவது இலகுவாகயிருக்கும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியை சீனாவிற்கு விஜயம் மேற்கொள்ளுமாறு சீன வெளிவிவகார அமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.
கருத்துகள் இல்லை