யாழில் காணமல்போன குடும்பஸ்தர் சடலமாக மீட்பு!


யாழில் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்த உள்ளூர் சிற்றுார்தி சேவை சாரதி ஒருவர் சங்கானை - மண்டிகை குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் மாதகல் பகுதியை சேர்ந்த கடம்பன் (வயது 38) என்ற குறித்த குடும்பஸ்த்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 3 தினங்களாக காணாமல்போயிருந்ததாக இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் குளத்திலிருந்து நேற்று பிற்பகல் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.