ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்கு நாமல் கூறிய ஆலோசனை!


அரசாங்கத்தின் கொள்கைகள் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு ஒத்துப் போகவில்லையென்றால், கண்ணியத்துடன் அரசாங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர்கள் பல்வேறு விடயங்கள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதை ஊடகங்களில் பார்த்தேன். ஆங்காங்கே சொல்லித் திரிவதை தவிர்க்க வேண்டும் எனவும் நாமல் குறிப்பிடார்.

ஏனெனில், மக்கள் எந்த இடத்திலும் சிரமப்பட வேண்டியதில்லை. இந்தக் கொள்கைகளை நடைமுறைப்படுத்த மக்கள் அவர்களுக்கு வாக்களித்ததாகவும் அவர் கூறினார்.

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி அமைச்சரவையில் இருப்பதால் கூட்டுப் பொறுப்பு இருக்க வேண்டும் என கூறிய நாமல், தனியே மொட்டுக் கட்சி மீது குற்றம் சுமத்த முடியாது என்றும் கூறினார்.

இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு முடிவுகளுக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் மொட்டுக் கட்சியும் பொறுப்பேற்க வேண்டும். ஏனெனில் அரசாங்கம் என்ற வகையில் எமக்கு கூட்டுப் பொறுப்பு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்தக் கொள்கைகள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு எவ்வகையிலும் பொருந்தவில்லையென்றால், வேறு கொள்கைகளைக் கேட்பார்களானால் கட்சித் தலைமைகள் வெவ்வேறு கூட்டங்களில் விமர்சித்துக் கொண்டிருக்காமல் கண்ணியமாகப் பேசுவது நல்லது என்றும் நாமல் ராஜபக்ச மேலும் கூறினார். 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.