பொலிசார் தாக்கியதில் இருவர் மருத்துவமனையில் அனுமதி!


யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் குடும்ப தகராறை தீர்க்க சென்ற பொலிஸார் தாக்கியதாக கூறி இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

நேற்று முன்தினம் இரவு 7.45 மணியளவில் யாழ்.வல்வெட்டித்துறை - கரணவாய் வடக்கு, கொற்றாவத்தை பகுதியில் அண்ணன் தம்பிக்கு இடையில் முரண்பாடு ஒன்று இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸில் சகோதரர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து முறைபாபட்டாளரின் எதிராளிகளை சந்திக்கவேண்டும்என பொலிஸார் கூறியுள்ளனர்.

அதனடிப்படையில் அழைத்து வரப்பட்ட பொலிஸார், தம்மீது தாக்குதல் நடத்தியதாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர்.

சம்பவத்தில், குலசேகரம் மிதுலன் (வயது- 24) என்பவரது அந்தரங்க பகுதியில் பொலிசார் மிதித்தாக தெரிவித்து அவர், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

அதோடு 40 வயதுடைய அப்புக்குட்டி வசந்தன் என்பவர் பொலிஸார் தாக்கியதில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்காது பொலிஸ் தடுப்புக் காவலில் தொடர்ந்தும் வைத்திருந்த நிலையில் உறவினர்கள் யாழ். மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரியின் கவனத்துக்கு கொண்டு சென்றதை அடுத்து அவரும் நேற்று காலை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக பொலிசாரால் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இதேவேளை தாக்குதல் நடாத்திய இரண்டு பொலிஸார் குறித்து வல்வெட்டித்துறை பொலிஸ் பொறுப்பதிகாரியிடம் முறையிட சென்றபோது அங்கிருந்த பொலிஸார் தடுத்ததாகவும், துப்பாக்கி முனையில் மிரட்டியதாகவும் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அதேசமயம் விசாரணைக்காக சென்ற பொலிஸாருடன் முரண்பட்ட சிலர் பொலிஸார் மீது தாக்குதல் நடத்த முயற்சித்த போது பொலிஸார் அதனை தடுத்து நிறுத்தியதாகவும் பொலிஸ் தரப்பு தகவல்கள் தொிவிக்கின்றன.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.