இலங்கைவரும் வெளிநாட்டவர்களுக்கு முக்கிய அறிவித்தல்!


கொவிட் பரவலுக்கு மத்தியில் நாட்டிற்கு வருகை தரும் வெளிநாட்டவர்களுக்கான புதிய சுகாதார வழிகாட்டல்களை சுகாதார அமைச்சு இன்று வெளியிட்டுள்ளது.

புதிய வழிகாட்டுதல்களின்படி, கொவிட் நோய்க்கு எதிரான ஒரு தடுப்பூசியைப் பெற்ற, கடந்த ஆறு மாதங்களில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் உட்பட இலங்கைவரும் அனைத்து வெளிநாட்டவர்களும் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களாக கருதப்படுகிறது.

மேலும், நாட்டிற்கு வந்தவுடன் விமான நிலையத்தில் நடத்தப்படும் PCR பரிசோதனையின்போது 30க்கும் குறைவான CT பரிசோதனை முடிவுகளைக் கொண்ட சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கையர்கள் 7 நாட்கள் சுய தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்கு இணங்கி விமான நிலையத்தை விட்டு வெளியேற முடியும்.

மேற்படி பெறுபேறுகளை கொண்டவர்களின் வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இருந்தால் மட்டுமே அவர்கள் விமான நிலையத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.

மேலும், முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெற்றோருடன் வருகைதரும் 12 வயதுக்குட்பட்ட பிள்ளைகள், கொவிட் பரிசோதனையில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்படுவர்.

மேலும் 12 முதல் 18 வயதுக்குட்பட்ட, ஒரே ஒரு பைஸர் தடுப்பூசி செலுத்தியுள்ள சிறுவர்கள் தங்களுக்கு தமது பெற்றோருடன் வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதிக ஆபத்துள்ள நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கான தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அவர்களது அறிக்கைகளுக்கு அமைய தீர்மானிக்கப்படும் என்றும் இந்த புதுப்பிக்கப்பட்ட வழிகாட்டலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, அவர்களின் தனிமைப்படுத்தல் காலம் 7 ​​முதல் 14 நாட்கள் வரை மாறுபடும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.