நாட்டில் திரிபோஷாக்கு தட்டுப்பாடு!
நாட்டில் போதுமான அளவில் சோளம் கிடைக்காத காரணத்தினால், ஜா-எலவில் உள்ள திரிபோஷா தொழிற்சாலையில் திரிபோஷாவை தயாரிக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இந்த நிலைமை தொடர்பாக அந்த நிறுவனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. அத்துடன் விநியோகஸ்தர்கள் ஊடாக வெளிநாடுகளில் இருந்து சோளத்தை இறக்குமதி செய்ய தற்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், அமெரிக்கா, பிரேசில், இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து ஆயிரத்து 500 மெற்றி தொன் சோளம் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இலங்கையில் உற்பத்தி செய்யப்படும் சோளத்திற்கு தேவையான இரசாயன பசளை மற்றும் கிருமி நாசனிகள் கிடைக்காத காரணத்தினால், இம்முறை பெரும் போகத்தின் போது சோள அறுவடை பெருமளவில் குறைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை