சுசில் விவகாரத்தில் விரைவில் தீர்மானம்!!

 


அரசாங்கத்தை விமர்சித்தமைக்காக சுசில் பிரேமஜயந்தவை இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டது தொடர்பான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் எதிர்வரும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என அதன் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

கட்சியின் அரசியல்குழு இந்த முடிவை எடுக்கும் என்றும் அவர் கூறினார், இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பில் ஏற்கனவே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஏனைய தலைவர்களுக்கும் இடையில் ஆரம்பக்கட்ட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கல்வி மறுசீரமைப்பு, திறந்த பல்கலைக்கழகங்கள் மற்றும் தொலைதூரக் கல்வி ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் கடந்த 4ஆம் திகதி பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.

அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின் பிரகாரம் பிரேம ஜயந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டார். சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்திலும் அதற்கு அப்பாலும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தவர்.

கடந்த 2ஆம் திகதி தெல்கந்த சந்தைக்கு சென்றபோது அரசை விமர்சித்தார். இதையடுத்து அவர் இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.