யாழிருந்து புறப்பட்ட ரயிலுடன் மோதிய காரில் பாரிய தீயால் ஒருவர் உயிரிழப்பு

 


காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலுடன், காரொன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்தை அடுத்து, காரில் தீ பரவிய நிலையில், காரின் சாரதி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வத்தளை பகுதியைச் சேர்ந்த 55 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனமொன்றில் பொறியியலாளராக கடமையாற்றும் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

வத்தளை − வனவாசல பகுதியிலுள்ள ரயில் தண்டவாளத்தில் கவனயீனமாக காரை செலுத்தியமையே விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறுகின்றனர்.
விபத்தை அடுத்து, காரில் தீ பற்றியுள்ளதுடன், அந்த தீ ரயிலுக்கும் பரவியுள்ளது.

இதனால், ரயில் எஞ்ஜின் பகுதி தீயினால் பாதிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.