திருமண நிகழ்வு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!!
நாட்டில் கோரோனா தொற்று அதிகரித்துவரும் நிலையில், திருமணங்கள் மற்றும் இசை நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் போது கோவிட் தடுப்பூசி அட்டையை கட்டாயமாக்க கம்பஹா மாவட்ட கோவிட் குழு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
கம்பஹா மாவட்டத்தில் இதனை நடைமுறைப்படுத்துமாறு சுகாதார மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு பணிப்புரை வழங்கப்பட்டுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
அதேசமயம் முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது தடுப்பூசிகளை எடுத்துக் கொண்டவர்கள் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களாகக் கருதப்படுகிறார்கள் என்று அமைச்சர் கூறியுள்ளார்.
அத்துடன் கோவிட் பரவுவதைத் தடுக்க அரசாங்கம் சில நடவடிக்கைகளை எடுக்க வேண்டியுள்ளதாகவும், நாட்டை மீண்டும் மூடுவது சாத்தியமில்லை எனவும் அவர் கூறினார்.
எனினும் , சுகாதாரத் திணைக்களத்தின் பரிந்துரைகளுக்கு இணங்க முடிவுகள் எடுக்கப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை