என் காதல் உண்மையானது அபி சரவணன் உருக்கம்!

 


கடந்த 2016-ல் வெளியான பட்டதாரி என்ற படத்தில் இணைந்து நடித்தவர்கள் அபி சரவணன் மற்றும் அதிதி மேனன். தற்போது அபி சரவணன், விஜய் விஷ்வா என்றும் அதிதி மேனன் தற்போது மிர்னா என்றும் பெயரை மாற்றிக் கொண்டு படங்களில் நடித்து வருகிறார்கள்.

பட்டதாரி படத்தில் நடித்த போது இருவருக்கும் காதல் மலர்ந்து பின் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டார்கள். சில மாதங்களில் அபி சரவணனுக்கும் தனக்கும் திருமணம் நடக்கவில்லை என்றும், போலியான சான்றிதழ்களை வைத்து தன்னை அவர் மிரட்டுகிறார் என்றும் காவல்துறையில் மிர்னா புகார் அளித்தார். இதுகுறித்து கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு மிர்னா மீது குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் அபி சரவணன்.
தற்போது டிசம்பர் 22, 2021 அன்று இந்த வழக்கில் தீர்ப்பு கிடைத்துள்ளது. அந்த தீர்ப்பில் மிர்னாவும் அபி சரவணனும் திருமணம் செய்து கொண்டது உண்மைதான் என்றும் இரண்டு மாதத்திற்குள் மிர்னா மேனன் அபி சரவணனுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மிர்னா மேனன் என்னுடன் தான் வாழவேண்டும் என ஒருபோதும் நான் கட்டாயப்படுத்த மாட்டேன். ஆனால் அவருக்காக எப்போதும் நான் காத்திருப்பேன். ஏனென்றால் என் காதல் உண்மையானது. உண்மையான என் காதலை புரிந்துகொண்டு அவர் மீண்டும் என்னிடம் திரும்பி வந்தால் என்னைவிட சந்தோஷப்படும் நபர் வேறு யாருமில்லை என்று கூறினார் அபி சரவணன்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.