தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி!!

 


முதலை தாக்கி தெஹிவளை கடலில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.


58 வயதான சுழியோடி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தெஹிவளை கடற்பகுதியில் நீராடிக்கொண்டிருந்த போது அவரை முதலை தாக்கியுள்ளதாக  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.


படுகாயமடைந்த அவர் களுபோவில போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.


இந்நிலையில் அத்திடிய வனஜீவராசிகள் காரியாலயத்தின் குழுவொன்று, சம்பவ இடத்திற்கு சென்று குறித்த முதலையைப் பிடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.