ஒரே நாளில் 17 பேர் பரிதாப மரணம்!!
நாட்டில் நேற்றுப் பதிவான வீதி விபத்துக்கள் உட்பட பல்வேறு சம்பவங்களில் சிக்கி 17 பேர் உயிரிழந்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
அவற்றில் 14 பேர் வீதி விபத்துக்கள் காரணமாக உயிரிழந்தவர்களாவர்.
கொழும்பு, கறுவாத்தோட்டம், மாலபே, பண்டாரகம, வரகாபொல, நிவித்திகல, கல்கமுவ, பதுளை, அக்கரைப்பற்று, ஓபாத, வெலிஓயா, ஹன்வெல்ல, அக்குரஸ்ஸ மற்றும் அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளிலேயே இந்த விபத்துக்கள் பதிவாகியுள்ளன.
இதனிடையே பதவிய மற்றும் வாரியபொல ஆகிய இடங்களில் இரண்டு கொலைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனவும், எலபாத்த பகுதியில் உள்ள வீடொன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 69 வயதான பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை