இறந்த நிலையில் கரையொதுங்கி ஆமையும், டொல்பினும்!!
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை தென் எருவில் பிரதேசத்திற்குட்பட்ட களுதாவளைக் கடற்கரைப் பகுதியில் இறந்த நிலையில் ஆமை ஒன்றும், டொர்பின் ஒன்றும் திங்கட்கிழமை(31) காலை கரை ஒதுங்கியுள்ளன.
காலை வேளையில் கடற்கரைக்குச் சென்றவர்களே இதனை அவதானித்துள்ளனர். சுமார் மூன்றரை அடி நீளமாக ஆமையும், 5 அடி நீளமான டொல்பினுமே இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளன.
இவ்வாறு இறந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ள கடல்வாழ் உயிரனங்கள் தொடர்பில் மட்டக்களப்பு வனஜீவராசிஙகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியுள்ளதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka
கருத்துகள் இல்லை