தமிழ்ப்பாடல் பாடிய பிரபல மலையாள ஹீரோ!!

 


தமிழ் பாடல் ஒன்றை பாடிய மலையாள திரையுலகின் பிரபல இளம் ஹீரோ குறித்த டீசர் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.


பிரபல மலையாள ஹீரோ துல்கர் சல்மான் ஒரு சில தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பதும் கடந்த 2000ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான ’கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ என்ற படம் சூப்பர் ஹிட்டானது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் துல்கர் சல்மான் நடித்து வரும் மற்றொரு படம் ’ஹே சினாமிகா’.  நடன இயக்குனர் பிருந்தா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டது என்பதும் விரைவில் இந்த படம் வெளியாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படத்தில் காஜல் அகர்வால் மற்றும் அதிதிராவ் ஹைத்ரி நாயகிகளாக நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ’அச்சமில்லை அச்சமில்லை’ என்ற பாடல் நாளை வெளியாக இருக்கும் நிலையில் இந்த பாடலின் டீசர் சற்று முன் வெளியாகி உள்ளது. மதன் கார்க்கி எழுதிய இந்த பாடலை துல்கர் சல்மான் பாடியுள்ளார் என்பது தான் இந்த பாடலுக்கான சிறப்பு. இவர் பாடிய முதல் தமிழ் பாடல் இதுதான் என்ற நிலையில் இந்த பாடல் மிகப் பெரிய ஹிட்டாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.