பயிலுனர் பட்டதாரிகளுக்கு நாளை முதல் நிரந்தர நியமனம்
அரசசேவையில் இணைத்துக்கொள்ளப்பட்ட பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் நடவடிக்கை நாளை ஆரம்பமாகவுள்ளது. இதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக அமைச்சரவை உபகுழுவின் தலைவர், அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார். இலவசக் கல்வியின் பிரதிபலனாக உயர்கல்வி கற்றவர்களுக்கு தொழில்வாய்ப்பு வழங்கும் ஜனாதிபதியின் கொள்கைத் திட்டத்திற்கமைய பயிலுனர் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளது.
சுமார் 53 ஆயிரம் பயிலுனர் பட்டதாரிகள் தற்போது அரச நிறுவனங்களில் அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக கடமையாற்றுகின்றனர். இவர்களில் ஒருவருடப் பயிற்சிக் காலத்தினை நிறைவு செய்த 42 ஆயிரத்து 500 பேருக்கு நாளை முதல் நிரந்தர நியமனம் வழங்கப்படும். அத்துடன் கடந்த வருடம் பெப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் பயிலுனர் பட்டதாரிகளாக சேவையில் இணைத்துக் கொள்ளப்பட்டவர்களுக்கு எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை