குழந்தைகளுக்கான ஒமிக்ரோன் அறிகுறிகள்!!

 


இந்தியாவில் கொரோனா நோய்த்தொற்றின் 3 ஆவது அலைத்தாக்கம் தீவிரம் பெற்றிருக்கிறது. இந்தப் பரவலின்போது அதன் நோய் அறிகுறிகள் பொதுவான அறிகுறிகளைக் கொண்டிருக்கிற அதேசமயத்தில் குறைவான பாதிப்புகளுடன் குழந்தைகளையும் அதிகளவில் தாக்கிவருகிறது. எனவே ஒமிக்ரோன் அறிகுறிகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு இந்திய மத்தியச் சுகாதாரத்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.


பொதுவான அறிகுறிகள்- மூன்றாவது அலையின்போது 11-18 வயது வரையிலான குழந்தைகளில்  சுவாசக் குழாய் தொற்றுடன்கூடிய காய்ச்சல் கொரோனாவின் பொதுவான அறிகுறியாகும்


பெரியவர்களுக்கான பொதுவான அறிகுறிகள்- குளிர், காய்ச்சல், இருமல், தொண்டைவலி, தசை பலவீனம் மற்றும் சோர்வு ஆகியவை பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. டெல்லியில்  99% நோயாளிகள் இந்த அறிகுறிகள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். மேலும் காய்ச்சல், இருமல், தொண்டைப்புண் ஆகியவை 5 ஆவது நாளுக்குப்பிறகு ஏற்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.


ஒமிக்ரான்- ஒமிக்ரான் மாறுபாட்டினால் ஏற்படும் நோய் அறிகுளிகள் இலகுவாக இருப்பதை மருத்துவர்கள் முன்பே உறுதிப்படுத்தியுள்ளனர். இதில் தொண்டைப்புண் தவிர வேறு சில அறிகுறிகளாகச் சோர்வு, காய்ச்சல், உடல்வலி, இரவில் வியர்த்தல் தும்மல்இ மூக்கு ஒழுகுதுல், குமட்டல் மற்றும் பசியின்மை ஆகியவை அடங்கும். டெல்டா மாறுபாட்டை போலன்றி ஒமிக்ரான் வாசனை மற்றும் சுவை இழப்புக்கு குறைவாகவே உள்ளது.


டெல்லியில் நடைபெற்ற சுகாதாரத்துறை அமைச்சகத்தின் வாராந்திர மாநாட்டின்போது சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் மேற்குறிப்பிட்ட தகவலை வெளியிட்டார்.


Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka 

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.