“இந்திய பிரதமருக்கு அனுப்பும் ஆவணம் நிச்சயம் கைச்சாத்திடப்படும்”

 


இந்திய பிரதமர் மோடிக்கு அனுப்பவுள்ள ஆவணம் நிச்சயம் கைச்சாத்திடப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இதில் எந்த விவாதமும் இல்லை எனவும் கூறியுள்ளார்.

அந்த ஆவணம் தொடர்பிலான செயற்பாடுகள் இன்னும் ஓரிரு தினங்களில் நிறைவடையும் என எதிர்பார்ப்பதாக அவர் கொழும்பு ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ், முஸ்லிம் மக்களின் ஒற்றுமை மிகவும் முக்கியமானது என்பதனால் அரசியல் கோரிக்கைகளை முன்வைக்கும் போது அது தொடர்பில் அதிக கரிசனை செலுத்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

வடக்கு, கிழக்கில் முஸ்லிம் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

முஸ்லிம் மக்களின் சகல விடயங்களும் ஆவணத்தில் உள்ளடக்கப்பட்டு இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.