வவுனியாவில் டெங்கு ஒழிப்பு!!

 


டெங்குநோயிலிருந்து எம்மை பாதுகாப்போம் நுளம்பு பெருகும் இடங்களை இல்லாமல் செய்வோம் எனும் தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வரும் நிகழ்ச்சித்திட்டதின் கீழ் வவுனியா மாவட்டத்தில் நகரசபையின் ஏற்பாட்டில் பெரியார்குளம் பிரதேசத்தில் இடம்பெற்றிருந்தது.



வவுனியா நகரபை தலைவர் இ.கௌதமனின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வவுனியா மாவட்ட செயலாளர் சரத்சந்திர, மாவட்ட பிராந்திய சேவைகள் பணிப்பாளர் மகேந்திரன், பிராந்திய தொற்றுநோயியலாளர் லவன், நகரசபை உறுப்பினர் பரதலிங்கம், நகரசபை செயலாளர் தயாபரன், நகரசபை சுகாதார பரிசோதகர் இலங்கேஸ்வரன், கிராமசேவையாளர், பொலிஸ் அதிகாரிகள், டெங்கு கட்டுப்பாட்டு உத்தியோகத்தர்கள், என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.



இதன் போது மாவட்ட செயலாளரினால் டெங்கு ஒழிப்பு நிகழ்ச்சித்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருந்ததுடன், அதன் தொடர்ச்சியாக பெரியார்குள பிரதேச வீதிகள், வடிகால்களில் டெங்கு பரவக்கூடிய இடங்கள் சுகாதார ஊழியர்களினால் துப்பரவு செய்யப்பட்டிருந்தது.


  

மேலும்  இப்பிரதச மக்களின் குடிமனைகளில் டெங்கு சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதுடன், டெங்கு தொடர்பான அறிவுறுத்தல்களும் சுகாதார பரிசோதகர் மற்றும் டெங்கு நோய் கட்டுப்பாட்டாளர்களாலும் மக்களிற்கு வழங்கப்பட்டிருந்தது..



மேலும் குடியிருப்பு பகுதிகளில் டெங்கு பரவுவதற்கு ஏதுவாக காணப்பட்ட இடங்கள் அடையாளப்படுத்தப்பட்டு வழக்குகளும் சுகாதார பரிசோதகரால் பதியப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.