ஓரவஞ்சகம்!!

வரியோடு வயது குறைய வந்தார்கள்!

சிறுவர்களை படையிலே சேர்த்தார்கள்!

சர்வதேச சட்டத்தினை

மீறினார்கள்!


அப்பப்பா!


2009 இற்கு முன்பு இதை 

சர்வதேச ஊடகங்களில் கேட்டு

காது வெடித்துப்போனது!


சரி

அப்படித்தான் நடந்தாலும்

எதிரி அகவைபேதமின்றி

அழித்தொழிக்க

ஆவி பிரிவதை விட

கூவி வரும் கந்தகத்தில்

உடல் கிழிந்து தொங்குவதை விட

கடத்தி காணாமல் ஆக்கப்பட்டு தொலைவதை விட

தாய்மண்ணை காத்து முத்தமிட்டு

மூச்சினை திறப்பது

மேலென விதையாய்

வீழ்பவனை

பயங்கரவாதியென

மேற்குலகம் பட்டம்

சூட்டியது!


இன்று

இந்தப்படம்  எழுகையின் வடிவமாய்

புகழப்படுகிறது!


அப்படியானால்?


ஐநாவின்

சிறுவர் சிறப்புரிமை சட்டங்களின் விழிப்படலத்தில்

இப்படங்கள்

விழுங்கப்படவில்லையா?

அல்லது

தங்களுக்கு இரத்தம் வந்ததால்

இவர்களும் போராளிகளாகின்றார்களா?

ஆயுதமேந்திப் போராட

அனுமதிக்கப்படுகின்றார்களா?

என்னடா உலகம்

எத்தனை ஓரவஞ்சகம்!


✍️தூயவன்


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.