புத்தளத்தில் இந்திய மீனவப் படகுகள் ஏலம்!

 


புத்தளம், கற்பிட்டியில் இந்திய மீனவர்களின் 04 படகுகள் ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டன.

இன்று முற்பகல் கற்பிட்டி – ஆனவாசல் கடற்படை முகாமில் இந்த ஏல விற்பனை இடம்பெற்றது.

இதன்போது யாழ்ப்பாணம், குருநாகல் மற்றும் வாரியபொல ஆகிய பகுதிகளில் இருந்து பத்திற்கும் மேற்பட்ட கொள்வனவாளர்கள் வருகை தந்திருந்தனர்.

தலா 50,000 ரூபா வீதம் நான்கு படகுகள் 2 இலட்சம் ரூபாவிற்கு இன்று விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதேவேளை, தலைமன்னாரில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 8 படகுகள் நேற்று ஏலத்தில் விடப்படவுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்த நிலையில், நேற்று ஏல விற்பனை நடைபெறவில்லை.


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.