உயிரிழை அமைப்பினரின் வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் – 2022!! { படங்கள் , வீடியோ இணைப்பு}

 


உயிரிழை அமைப்பினரின் 2022ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டு நிகழ்வுகள் 16.02.2022 தொடக்கம் 26.02.2022 வரை நடைபெற்றன.விளையாட்டுப் போட்டியின் இறுதி நிகழ்வுகள் 26.02.2022 நேற்றைய தினம் அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக அமைப்பின் ஸ்தாபகர் Dr.சிவதாஸ் அவர்களும், முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திருமதி. சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா அவர்களும் மற்றும் கௌரவ விருந்தினர்களாக பணிப்பாளர்சபை உறுப்பினர்களான Dr.சுதாகரன், திரு.K.வசந்தரூபன், திரு. S.ஸ்ரீநிவாசன் ஆகியோருடன் வவுனியா பிரதேச செயலகம், விளையாட்டு உத்தியோகத்தர் திரு. T.விந்துஜன் அவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.


அத்துடன் பயனாளிகள், உறவினர்கள் எனப் பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.
விளையாட்டுப் போட்டிகளில் வெற்றியீட்டிய வீரர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்வாண்டிற்கான விளையாட்டு நிகழ்வுகளுக்கான நிதியினை கனடா – கனேடிய விளையாட்டுத்துறையினர் ஒழுங்குபடுத்தி வழங்கியுள்ளனர்.
Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.