பிளாஸ்டிக் பரப்புகளில் 8 நாட்கள் உயிர் வாழும் ஒமிக்ரோன் வைரஸ்!

 


ஒமிக்ரோன் வைரஸ் பிளாஸ்டிக்கில் 8 நாட்களும் தோலில் 21 மணித்தியாலங்களும் உயிர் வாழக்கூடியதென ஆய்வொன்றில் கண்டறியப்பட்டுள்ளது.


கொரோனா வைரஸின் ஏனைய திரிபுகளான அல்ஃபா, பீட்டா, காமா மற்றும் டெல்டாவை விடவும் ஒமிக்ரோன், பிளாஸ்டிக் மற்றும் தோலில் உயிர் வாழும் தன்மையின் வீதம் அதிகமென கூறப்பட்டுள்ளது.


ஜப்பானில் உள்ள கியோட்டோ மாகாண மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதனை தெரிவித்துள்ளனர்.


மதுசாரம் அடங்கிய தொற்றுநீக்கி திரவத்தை பயன்படுத்தினால் ஒமிக்ரோன் உள்ளிட்ட அனைத்து திரிபுகளையும் 15 நொடிகளில் செயலிழக்கச் செய்து விடலாம் என ஆய்வாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


இந்த ஆய்வின்போது, சீனாவின் உகானில் உருவான கொரோனா தொடங்கி பல்வேறு மாறுபாடுகள் வரையில், சுற்றுச்சூழல் தன்மையின் வேறுபாடுகளை ஆராய்ந்து உள்ளனர்.


கொரோனா வைரஸ் பிளாஸ்டிக் பரப்பின் மீது 56, அல்ஃபா 191.3, காமா 59.3, பீட்டா 156.6, டெல்டா 114 மணி நேரம் வாழும். ஒமிக்ரோன் 191.3 மணி நேரம் வாழும்.


ஒமிக்ரோன் தோலில் 21 மணி நேரத்திற்கு மேலாக உயிர் வாழ்கின்ற நிலையில், அல்ஃபா 19.6, பீட்டா 19.1, காமா 11, டெல்டா 16.8 மணி நேரம் உயிர் வாழுமாம்.

#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo


கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.