நிமிர்வோடு பாதம் பதி.....!!


நிறம் தொலைத்த 

வானவில்லாய் 

நெஞ்சுக்கூடு......


அகோரியின் தவத்தை 

ஒத்திருக்கிறது 

மனக்கூடு....


பாதம்பட்டுச் சரியும் 

மணல் துகளைப்போல

ஈரக்குடை பிடிக்கிறது

உயிர்ச்சிறை.....


பேரிரைச்சலுடன் எழும்பி

புதுப்புது அலைகொண்டு

வண்ணம் வரைகிறது

வாழ்க்கை  கடல்...


எண்ணங்கள் தான் 

ஏற்றம் தருகிறது....

சிவந்த மனதில் 

செண்பக வாசனை....


ஆறாம் அறிவே கடவுளானால்

அட.....நீயென்ன .நானென்ன...

சூரியப் பாதைகள்

சுகமானவையே.....


கோபிகை.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.