மாகாணங்களுக்கு இடையிலான பேருந்துகள் நிறுத்தம்!


நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான சுமார் 300 தனியார் பேருந்துகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை மாகாணங்களுக்கிடையிலான தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் ஒழுங்குபடுத்தப்படும் மாகாணங்களுக்கிடை யிலான தனியார் பேருந்துகள் சுமார் 3,200 உள்ளதாகவும், அவற்றில் சுமார் 2,000 பேருந்துகள் தற்போது இயங்கி வருவதாகவும் அதன் தலைவர் சரத் விஜித குமார சுட்டிக்காட்டியுள்ளார்.

2,000 பேருந்துகளில் இதுவரை 300 ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இந்த நிலை தொடருமானால் பேருந்துகளை இயக்க முடியாமல் பயணிகள் கடும் சிரமங்களைச் சந்திக்க நேரிடும் எனவும் கூறினார்.

அதேசமய்ம் சில பகுதிகளில் எரிபொருள் நிரப்பு நிலையங் களில் வழமையான டீசல் இல்லை எனவும் சுப்பர் டீசலை அதிக விலை கொடுத்து கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாகவும் சரத் விஜித குமார தெரிவித்தார்.

Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper  #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.